Saturday, August 23, 2008

Sunday, August 17, 2008

first step to victoy

நான் எப்பொழுதும் வெற்றியின்
முதல் படியிலேயே இருக்கிறேன்
ஏன் தெரியுமா?
நான் எப்பொழுதும் வெற்றியின்
முதல் படியிலேயே இருக்கிறேன்
ஏன் தெரியுமா?
தோல்வி தான் வெற்றிக்கு
முதல் படி.

(விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன)

first to step to victory

Thursday, August 14, 2008

nunguvandi kaalam

நுங்குவண்டி காலம்

நுங்குவண்டி என்றதும் ஏதோ தள்ளுவண்டியில் நுங்கை வைத்து விற்பனைக்காக செல்லும்வண்டி என்று நினைத்துவிடாதீர்கள் .அந்த அர்த்தத்தில் பார்த்தால் அதில்
மனிதனின் குழந்தைப்பருவம் முதல் முதுமைப்பருவம்வரை எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். ஏனென்றால் எத்தகைய மாற்றமுமின்றி
அந்த வண்டி எல்லாகாலத்திலும் வரலாம்.

நான் கூறும் வண்டி வேறு. இது குறிப்பிட்ட காலத்தில் (விடலைப்பருவத்தில்)
மட்டுமே வரும் என்று நான் கருதுகிறேன். சரி, விஷயத்துக்கு வருகிறேன்
.

நுங்கை இரண்டு விதமாக சாப்பிடலாம். மட்டையை வெட்டி கூறுபோட்டு
ஓட்டுடன் நுங்கை தனியாக எடுத்து சாப்பிடுவது ஒன்று. மற்றொன்று இளநீரை
ப்போல நுங்குமட்டையின் மேல் புறத்தை சீவிவிட்டு அதன் உள்ளே ஒன்று,
இரண்டு,அல்லது மூன்று'கண்களில் ' இருக்கும் நுங்கை ஆள் காட்டி விரலை
விட்டு பொத்து அப்படியே வாயில் வைத்து உறிஞ்சி சாப்பிடுவது. இவ்வாறு
சாப்பிட்டு விட்டு அந்த மட்டையை எறிந்துவிடுவார்கள். அதை குடுக்கை என்று
கூறுவார்கள்.

அத்தகைய குடுக்கைகளில் மூன்று கண் உள்ள குடுக்கைகள் இரண்டை எடுத்து
அதன் மையத்தில் சுமார் மூன்று அங்குல நீளமுள்ள குச்சியை எடுத்து குக்க்சியின்
இரண்டு புறமும் இரண்டு மட்டைகளை குத்தினால் நுங்கு வண்டி தயார்.
இரண்டு மட்டை(குடுக்கை)களுக்கு இடையில் சுமார் மூன்று அடி நீளமுள்ள
ஒரு கவட்டை குச்சியின் கவட்டை பகுதியை வைத்து தள்ளினால் வண்டி ஓடும்.

நமது கதையின் (கனவின்) மையப்பகுதியாகிய அயிலூர்
கிராமத்தில் பத்து பனிரெண்டு வயது சிறுவர்கள் நுங்கு வண்டியை பஸ்சாக
பாவித்து (எம்மஸ் -அங்காளம்மன்,சின்னத்தம்பி -சதரன் விருத்தகிரி தேவி அம்மா
transports,மற்றும் காளிப்பன் , நாவராசன்,ஏதோ நினைவில் இல்லாத பெயர்களில் )
ஒட்டி விளையாடி மகிழ்ந்த காலத்தில் நடந்த சுவையான நிகழ்ச்சிகளை
இனி பார்ப்போம் ,

விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன - வியாழன் தோறும் நுங்குவண்டி
ஓடும்,)

Wednesday, August 13, 2008

translations

LANGUAGE-NAME-FLOWER.

HELLO FRIENDS,
IN THESE COLOUMNS, I WILL GIVE YOU SOMETHING IN ENGLISH. YOU HAVE TO TRANSLATE IT CORRECTLY IN TAMIL.
IT WILL NOT BE AN ORDINARY TRANSLATION. FOR EXAMPLE TAKE THE HEADDING IT SELF. IT GIVES THE MEANING
LANGUAGE = MOZHI, NAME= PEYAR ,FLOWER=POO IN TAMIL ALLTOGETHER IT GIVES THE MEANING OF "MOZHI PEYARPOO" THAT IS TRANSLATION.THIS TYPE OF FUNNY TRASLATION I WANT. EACH WORD MAY HAVE DIFFERENT
MEANINGS. YOU HAVE TO CHOOSE THE CORRECT MEANING. THEN ONLY YOU CAN GET THE CORRECT SENTENCE IN
TAMIL.SORRY THESE PUZZLES ARE ONLY FOR THOSE WHO KNOW ENGLISH AND TAMIL. IF YOU CORRECTLY GOT THE
MEANING AND COMPLETE THE SENTENCE, THEN SEND ME BY e-mail to my e-mail ID
I WILL GIVE ONE SENTENCE EVERY WEEK.,PREFERABLY ON WEDNESDAYS UNDER THE HEAD AYILAI KANDASAMY
PAGES. EVERY MONDAYS (IN TAMIL) NONGU VANDI KALAM, EVERY TUESDAYS PUDHUKAVITHAI, EVERY THURSDAYS
ONE NOVEL THODARKADHAI, AND EVERY FRIDAY ONE SIRUKADHAI. YOUR CRITICISMS , OPINIONS MOST WELCOME.

Sunday, August 10, 2008

சிறுகதை

ஒருநாள் கடவுள் பூமிக்கு வந்தார் . குப்பன்,சுப்பன்,முத்தன் ஆகியோரை சந்தித்தார் மூன்று ஏகர் நிலம் கொடுத்து "ஆளுக்கு ஒரு ஏக்கர் நிலம் எடுத்து கொள்ளுங்கள். என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். நான் மீண்டும் எப்போது வேண்டுமானாலும் வருவேன் .என்ன சட்டம் வேண்டுமானாலும் போடுவேன்." எனறு கூறிவிட்டு போய்விட்டார்

குப்பன் சோம்பேறி.நிலத்தில் ஒன்றுமே செய்யவில்லை."மரத்தை வெச்சவன் தண்ணி ஊத்துவான்" எனறு பாடிக்கொண்டே காலம் கழித்தான்

சுப்பன் சாதாரண மனிதன். ஒருஎக்கரில்பத்து வாழை மரங்களை நட்டுவைத்தான். பிறகு மழை வந்தால் பிழைத்துக்கொள்ளட்டும் என்று விட்டுவிட்டான்.

முத்தன் கடும் உழைப்பாளி. ஒரு எக்கரில் இருபது வாழை மரங்களை நட்டான். தண்ணீரை சுமந்து கொண்டுவந்து ஊற்றினான். எரு போட்டான் வாழைகள் நன்கு வளர்ந்தன.

குப்பன் நிலத்தில் ஒன்றுமே விளையவில்லை.

சுப்பன் நிலத்தில் பத்து வாழைத்தார்கள் விளைந்தன. 500 ரூபாய்க்கு விற்கலாம்

முத்தன் நிலத்தில் இருபது தார்கள் விளைந்தன.ஆயிரம் ரூபாய்க்கு விற்கலாம்

அப்போது திடீரென்று கடவுள் பூமிக்கு வந்தார்."நான் இந்த நொடியிலிருந்து ஒரு சட்டம் போடுகிறேன். வருமானமே இல்லாதவர்களுக்கு 500 ரூபாய் பரிசாக வழங்கப்படும். ரூபாய் 500 வரை வருமானம் உள்ளவர்களுக்கு வரியும் இல்லை பரிசும் இல்லை அதற்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு வருமானத்தில் பாதி வரி ஆகும்" என்று கூறிவிட்டு போய்விட்டார்

அதன்படி சுப்பனுக்கு பத்து தார்களை விற்றதில் 500 கிடைத்தது .முத்தனுக்கு இருபது தார்களை விற்றதில் ஆயிரம் கிடைத்தது அதில் பாதி வரியாக பிடித்தது போக அவனுக்கு 500 கிடைத்தது முத்தனிடம் பிடிக்கப்பட்ட பணம் குப்பனுக்கு பரிசாக வழங்கப்பட்டது.

(விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன )

(சிறுகதைகள் திங்கள்தோறும் வெளி வரும்)

joke

ஜோக்

மன்னர் :- அமைச்சரே, ஆராய்ச்சி மணியை அடித்தது யார்?

அமைச்சர்:- மன்னா! வடகாசி வரலக்ஷ்மி மூன்றாவது முறையாக அடித்திருக்கிறார்.

மன்னர்:- என்னவாம்?

அமைச்சர்:- அருகில் உள்ள ஆண்கள் பாலியல் தொல்லை கொடுப்பதாக கூறி
முதல்முறை ஆராய்ச்சி மணியை அடித்தார்.உடனே நான் பாதுகாப்புக்கு
காவலர்களை அனுப்பினேன்.
மன்னர்:- பிறகு?

அமைச்சர்:-அந்த வீரர்கள் பாலியல் தொல்லைகொடுப்பதாக கூறி இரண்டாவதாக
அடித்தார். நான் காவலர்களை நீக்கிவிட்டு பெண் காவலர்களை நியமிததேன்.

மன்னர்:- சரி . இப்பொழுது மூன்றாவது முறையாக எதற்காக அடித்திருக்கிறார்?

அமைச்சர்:- பெண் காவலர்கள் அவரை லெஸ்பியன் உறவுக்கு அழைக்கிறார்களாம்

மன்னர்:- ??!!??

Saturday, August 9, 2008

விட்டில் பூச்சி

விளக்கு விட்டிலைப்பார்த்து வினவியது

தொட்டதும் மாள்வோமெனத் தெரிந்தும்

தொடத்துடிப்பதேன்?

விட்டில் விவரமாக விளக்கியது

எட்ட இருந்து பார்த்து ஏங்கித் தவிப்பதைவிட

ஒருமுறை

தொட்டுணர்ந்து மடிவது மேல்.