Thursday, August 14, 2008

nunguvandi kaalam

நுங்குவண்டி காலம்

நுங்குவண்டி என்றதும் ஏதோ தள்ளுவண்டியில் நுங்கை வைத்து விற்பனைக்காக செல்லும்வண்டி என்று நினைத்துவிடாதீர்கள் .அந்த அர்த்தத்தில் பார்த்தால் அதில்
மனிதனின் குழந்தைப்பருவம் முதல் முதுமைப்பருவம்வரை எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். ஏனென்றால் எத்தகைய மாற்றமுமின்றி
அந்த வண்டி எல்லாகாலத்திலும் வரலாம்.

நான் கூறும் வண்டி வேறு. இது குறிப்பிட்ட காலத்தில் (விடலைப்பருவத்தில்)
மட்டுமே வரும் என்று நான் கருதுகிறேன். சரி, விஷயத்துக்கு வருகிறேன்
.

நுங்கை இரண்டு விதமாக சாப்பிடலாம். மட்டையை வெட்டி கூறுபோட்டு
ஓட்டுடன் நுங்கை தனியாக எடுத்து சாப்பிடுவது ஒன்று. மற்றொன்று இளநீரை
ப்போல நுங்குமட்டையின் மேல் புறத்தை சீவிவிட்டு அதன் உள்ளே ஒன்று,
இரண்டு,அல்லது மூன்று'கண்களில் ' இருக்கும் நுங்கை ஆள் காட்டி விரலை
விட்டு பொத்து அப்படியே வாயில் வைத்து உறிஞ்சி சாப்பிடுவது. இவ்வாறு
சாப்பிட்டு விட்டு அந்த மட்டையை எறிந்துவிடுவார்கள். அதை குடுக்கை என்று
கூறுவார்கள்.

அத்தகைய குடுக்கைகளில் மூன்று கண் உள்ள குடுக்கைகள் இரண்டை எடுத்து
அதன் மையத்தில் சுமார் மூன்று அங்குல நீளமுள்ள குச்சியை எடுத்து குக்க்சியின்
இரண்டு புறமும் இரண்டு மட்டைகளை குத்தினால் நுங்கு வண்டி தயார்.
இரண்டு மட்டை(குடுக்கை)களுக்கு இடையில் சுமார் மூன்று அடி நீளமுள்ள
ஒரு கவட்டை குச்சியின் கவட்டை பகுதியை வைத்து தள்ளினால் வண்டி ஓடும்.

நமது கதையின் (கனவின்) மையப்பகுதியாகிய அயிலூர்
கிராமத்தில் பத்து பனிரெண்டு வயது சிறுவர்கள் நுங்கு வண்டியை பஸ்சாக
பாவித்து (எம்மஸ் -அங்காளம்மன்,சின்னத்தம்பி -சதரன் விருத்தகிரி தேவி அம்மா
transports,மற்றும் காளிப்பன் , நாவராசன்,ஏதோ நினைவில் இல்லாத பெயர்களில் )
ஒட்டி விளையாடி மகிழ்ந்த காலத்தில் நடந்த சுவையான நிகழ்ச்சிகளை
இனி பார்ப்போம் ,

விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன - வியாழன் தோறும் நுங்குவண்டி
ஓடும்,)

No comments: