Sunday, August 10, 2008

சிறுகதை

ஒருநாள் கடவுள் பூமிக்கு வந்தார் . குப்பன்,சுப்பன்,முத்தன் ஆகியோரை சந்தித்தார் மூன்று ஏகர் நிலம் கொடுத்து "ஆளுக்கு ஒரு ஏக்கர் நிலம் எடுத்து கொள்ளுங்கள். என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். நான் மீண்டும் எப்போது வேண்டுமானாலும் வருவேன் .என்ன சட்டம் வேண்டுமானாலும் போடுவேன்." எனறு கூறிவிட்டு போய்விட்டார்

குப்பன் சோம்பேறி.நிலத்தில் ஒன்றுமே செய்யவில்லை."மரத்தை வெச்சவன் தண்ணி ஊத்துவான்" எனறு பாடிக்கொண்டே காலம் கழித்தான்

சுப்பன் சாதாரண மனிதன். ஒருஎக்கரில்பத்து வாழை மரங்களை நட்டுவைத்தான். பிறகு மழை வந்தால் பிழைத்துக்கொள்ளட்டும் என்று விட்டுவிட்டான்.

முத்தன் கடும் உழைப்பாளி. ஒரு எக்கரில் இருபது வாழை மரங்களை நட்டான். தண்ணீரை சுமந்து கொண்டுவந்து ஊற்றினான். எரு போட்டான் வாழைகள் நன்கு வளர்ந்தன.

குப்பன் நிலத்தில் ஒன்றுமே விளையவில்லை.

சுப்பன் நிலத்தில் பத்து வாழைத்தார்கள் விளைந்தன. 500 ரூபாய்க்கு விற்கலாம்

முத்தன் நிலத்தில் இருபது தார்கள் விளைந்தன.ஆயிரம் ரூபாய்க்கு விற்கலாம்

அப்போது திடீரென்று கடவுள் பூமிக்கு வந்தார்."நான் இந்த நொடியிலிருந்து ஒரு சட்டம் போடுகிறேன். வருமானமே இல்லாதவர்களுக்கு 500 ரூபாய் பரிசாக வழங்கப்படும். ரூபாய் 500 வரை வருமானம் உள்ளவர்களுக்கு வரியும் இல்லை பரிசும் இல்லை அதற்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு வருமானத்தில் பாதி வரி ஆகும்" என்று கூறிவிட்டு போய்விட்டார்

அதன்படி சுப்பனுக்கு பத்து தார்களை விற்றதில் 500 கிடைத்தது .முத்தனுக்கு இருபது தார்களை விற்றதில் ஆயிரம் கிடைத்தது அதில் பாதி வரியாக பிடித்தது போக அவனுக்கு 500 கிடைத்தது முத்தனிடம் பிடிக்கப்பட்ட பணம் குப்பனுக்கு பரிசாக வழங்கப்பட்டது.

(விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன )

(சிறுகதைகள் திங்கள்தோறும் வெளி வரும்)

1 comment:

Senthil said...

நல்லதோர் கதை... இருப்பினும் இது போன்ற அரசின் சட்டத்தினில் ஒரு சில நல்லோரும் பயன் அடைவதால், வேறு வழியின்றி இந்த விடயத்தை ஒப்புக்கொள்ள வேண்டி இருக்கின்றது..
ஆந்திராவிலும் ராஜஸ்தானிலும் ஆங்காங்கே அப்பாவி விவசாயி மாள்வதை தடுப்பதாக இந்த சட்டம் அமைந்தால் அதை வரவேற்போம்..
இதை விட வாழை தார் விலையினை விழுங்கும் இடை தரகர்களையும், நீர், மண், உரம் மற்றும் எல்லா வற்றிலும் ஊழல் புரியும் அரசியல்வாதிகளை ஒழிப்பதற்கு கொண்டு வருவார்களா? - senthil